முல்லைத்தீவு, முறிகண்டி செல்வபுரத்தில் இன்று நடந்த விபத்தில் மாணவிகள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடந்துள்ளது. இரு சைக்கிளில் பயணித்த சகோதரிகளான மாணவிகள் மீது பின்புறமாக டிப்பர் மோதியது என்று தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவிகள் இருவரும் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். டிப்பர் வாகனமும் பொலிஸாரால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
Discussion about this post