ஐ.நா மனித உரிமை பேரவையில் 2012 இல் இருந்து இலங்கை தொடர்பான
தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சீனா
எதிரான நிலைப்பாட்டை மிக வெளிப்படையாக எடுத்திருக்கின்றது.
ஆகவே தமிழ் மக்களை பெறுத்தவரையில் ஜனநாயகம் பேணப்படவேண்டும் என்று குரல்
கொடுக்கின்ற வகையிலே சீனாவினுடைய செல்வாக்கு இலங்கையில் அதிகரிப்தை
நாங்கள் விரும்பவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன்
தெரிவித்தார்
நாங்கள் எந்த நாட்டுக்கும் சாந்தவர்கள் அல்ல எதிரானவர்களும் அல்ல ஆனால்
இலங்கைவாழ் தமிழ் மக்களை பெறுத்தளவிலே எங்களுடைய அரசியல் பிரச்சனை
சம்மந்தமாக இந்தியா தமிழ் மக்கள் சார்பிலே சர்வதேச உடன்படிக்கையை 1987 ம்
ஆண்டு கைச்சாத்திட்டது அது முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்பது
எங்களுடைய கோரிக்கை.
அதன்காரணமாக நாங்கள் இந்தியாவுடன் நெருங்கி செயற்படுகின்றோம் இந்திய
அரசும் தொடர்சியாக அதிலே உள்ள விடையங்கள் நிறைவேற்றப்படவேண்டும் என்று
தங்களுடைய கருத்தை மிகவும் ஆணித்தரமாக சொல்லிவருகின்றனர்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் பகையிருப்பது எல்லோருக்கும் தெரிந்த
விடையம் இந்தியாவினுடைய கரை எல்லை இலங்கை கரை எல்லை 30 கிலோ மீற்றர்
தூரத்தில் இருக்கின்றது. இந்தியாவினுடைய பாதுகாப்பு நிமிர்த்தமாக இந்தியா
கரிசனையாக இருப்பது எவரும் ஏற்றுக் கொள்ள கூடிய விடயம்.என்றார்.
Discussion about this post