யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இன்று நடந்த ரயில் விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சங்கத்தானை ரயில் நிலையத்தில் கடமையில் இருந்த சமன்குமார என்ற இராணுவச் சிப்பாயே உயிரிழந்துள்ளார்.
இராணுவச் சிப்பாய் உணவு எடுக்கச் சென்ற சமயம், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலுடன் இவர் மோதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடல் தற்போது சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சாவகச்சேரிப் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Discussion about this post