சவர்க்காரம் மற்றும் சலவைத் தூளுக்கு சந்தையில் அதிக தேவை காணப்படுகின்றது என்றும், அவற்றின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது என்றும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
எதிர்வரும் வாரத்தில் சவர்க்காரம் மற்றும் அது சார்ந்த பொருள்களின் விலையை சவர்க்கார நிறுவனங்கள் உயர்த்தும் என விற்பனையாளர்கள் எச்சரித்ததைத் தொடர்ந்து, நுகர்வோர் சவர்க்காரம் உள்ளிட்ட பொருள்களை வாங்கிக் குவித்து வருவதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
அதனால் சந்தையில் தற்போது சவர்க்காரம், சலவைத் தூள் என்பவற்றைப் பெற முடியாத நிலைமை உள்ளது. சில இடங்களில் மக்கள் அதற்கும் வரிசைகளில் நிற்பதைக் காணமுடிகின்றது.
இதேவேளை, சவர்க்காரம் மற்றும் தொடர்புடைய பொருள்களின் விலை சுமார் இருநூறு வீதம் அதிகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post