சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் பாதுகாப்பு
அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மேலும் ஆராய்ந்த பின்னர்
எதிர்வரும் ஓகஸ்ட் 06ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்
கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 06ஆம் திகதி வரை
நான்கு நாட்கள் பாராளுமன்ற அமர்வுகளை முன்னெடுப்பதற்கு சபாநாயகர் மஹிந்த
யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (19) இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள்
பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஓகஸ்ட் 06ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை சேர்
ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் மற்றும்
குடிவருவோர், குடியகல்வோர் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன
இரண்டாவது நாள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருப்பதாகவும் செயலாளர்
நாயகம் குறிப்பிட்டார். அன்றையதினம் பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணிவரை
சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை குறித்த விவாதமும் நடைபெறும்.
Discussion about this post