கைவிசேடம் கொடுக்க மறுத்தவர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு மட்டுவிலில் இடம்பெற்றுள்ளது.
புலம்பெயர் நாட்டிலிருந்து வந்த நபரொருவர் வீட்டிலுள்ளவர்களுக்கு சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டுக் கைவிசேடம் வழங்கியுள்ளார்.
இதைக் கேள்வியுற்று மதுபோதையில் சென்ற ஒருவர் தனக்கும் கைவிசேடம் வழங்குமாறு கோரியுள்ளார். அவ்வாறு சென்றவரிடம், நாளை காலையில் வருமாறு கைவிசேடம் கொடுத்தவர் தெரிவித்ததையடுத்து மதுபோதையில் இருந்தவர் அவர்மீது இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார்.
இதனால் கையில் காயமடைந்த குறித்த நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post