கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் 19
தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று (28.07.2021) காலை ஒன்பது மணிக்கு
ஆரம்பிக்கப்பட்டுள்ளது..
கல்வித் துறை ஊழியர்கள், போக்குவரத்து துறை ஊழியர்கள் முச்சக்கர வண்டி சாரதிகள்,
ஊடகவியலாளர்கள் என பலர் தடுப்பூசியை பெற்றுக்கொள்கிறார்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி மத்திய கல்லூரி, அக்கராயன் மகா
வித்தியாலயம், வட்டக்கச்சி மத்திய கல்லூரி, உருத்திரபுரம் வைத்தியசாலை,
தர்மபுரம் மத்திய கல்லூரி, முழங்காவில் வைத்தியசாலை,பூநகரி வைத்தியசாலை,
வேரவில் வைத்தியசாலை, பளை மத்திய கல்லூரி ஆகிய ஒன்பது தடுப்பூசி நிலையங்களில்
ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மாற்றுவலுவுள்ளோர், கடுமையான மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், படுக்கை
நோயாளிகள், முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் ஆகியோருக்கு நடமாடும் சேவை
பிரிவினர் இருப்பிடம் சென்று தடுப்பூசி வழங்கபடவுள்ளமையும்
குறிப்பிடத்தக்கவிடயம்
அதேபோன்று கிளிநொச்சியில் உள்ள 12 வாரங்களுக்கு அதிகமான கர்ப்பிணி
தாய்மார்கள் குறிப்பிட்ட
நிலையங்களுக்குச் சென்று தங்களுக்குரிய தடுப்பூசியை பெற்றுக்கொள்ள
இவர்களுக்கு என பிரத்தியோகமான ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.என சுகாதார சேவையின் தெரிவித்துள்ளார்கள்.
கிளிநொச்சியில் பொலிஸாருக்கும் இதன்போது தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவருகிறது
Discussion about this post