கொழும்பு, காலி முகத் திடலில் இன்று அரசாங்கத்துக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தில் மக்களால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தினமும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், இன்று கொழும்பு, காலி முகத் திடலில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு பல இடங்களில் இருந்தும் இளைஞர், யுவதிகள் வந்தவண்ணம் உள்ளனர்.
தற்போதுவரை ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ள நிலையில், இந்தக் எண்ணிக்கை நேரம் செல்லச் செல்ல அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ராஜபக்ச சகோதாரர்கள் ஆட்சியை விட்டுச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தும் கோசங்களை எழுப்பியவாறும், பதாகைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post