முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாம் தவணை ஆட்சியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு காலாவதியான மருந்துப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன என்று தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு மாத்திரமன்றி ஒருசில நோயாளிகளுக்கும் வழங்கப்படும் போலிக் ஆசிட் மாத்திரைகளில், 55 ஆயிரத்து 245 கோடிக்கும் அதிகமான மாத்திரைகள் காலாவதியாகும் நாளை அண்மித்த நிலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது.
இவை 2013 ஆம் ஆண்டு தொடக்கம் 2016ம் ஆண்டு வரை கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் நோயாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மாத்திரைகளில் நாற்பது இலட்சம் மாத்திரைகள் காலாவதியானவை என்று தெரிய வந்தவுடன் அவற்றை நோயாளிகளுக்கு விநியோகிப்பதை இடைநிறுத்துவதற்கான அறிவித்தல் வழங்க முன்னதாக அவற்றில் 98 சதவீதம் மாத்திரைகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்தன என்றும் கூறப்படுகின்றது.
அவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல்கள் பொதுக் கணக்கு தொடர்பான நாடாளுமன்றக் குழுவால் வௌியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post