முள்ளியவளை களிக்காட்டுப்பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நேற்றுமுன்தினம் இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குமுழமுனையைச் சேர்ந்த சுப்பிரமணியம் கோபிநாத் (வயது -44) என்பவரே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பத்தலைவர் தண்டுவானில் இருந்து முள்ளியவளை நோக்கி மோட்டார் சைக்கிளில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் பயணித்துள்ளார்.
இதன்போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வயல்கம்பிக் கட்டையில் மோதியுள்ளது. இதையடுத்து அதில் பயணித்த மேற்படி நபர் படுகாயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவுப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Discussion about this post