Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

கடும் மோதலில் ரணில் – பசில்

October 29, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
கடும் மோதலில் ரணில் – பசில்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் முன்னெடுக்கப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் பசில் ராஜபக்ஷ அதிருப்தி அடைந்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

மொட்டுக் கட்சி வழங்கியுள்ள பெயர்ப் பட்டியலின் அடிப்படையில், அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி வழங்கவில்லை என்று பசில் ராஜபக்ஷ, ரணிலிடம் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அதிக அமைச்சுக்களைக் கொடுத்துள்ளமைக்கான கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மொட்டுக் கட்சியின் கருத்தைக் கேட்காமல் ஜனாதிபதி ரணில் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்டுள்ளமைக்குக் கடந்த சில நாட்களாகத் தொடர் ஊடக சந்திப்புக்களை நடத்தும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியை எதிர்க்கும் வகையில் பல்வேறு கருத்துகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

கொழும்பு அரசியலில் திடீரென ஏற்பட்ட பரபரப்பு: கடும் மோதலில் ரணில் - பசில் ராஜபக்ஷ! | Colombo Politics Ranil Basil Rajapaksa Tough Fight

இந்தச் செயற்பாட்டுக்கு ஜனாதிபதி ரணில், பசில் ராஜபக்ஷவிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் பொதுஜன பெரமுனவின் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதேவேளை, பொதுஜன பெரமுனவுடன் கலந்துரையாடல்கள் எதனையும் நடத்தாது ஜனாதிபதி அமைச்சரவையில் மறுசீரமைப்பை மேற்கொண்டுள்ளமைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

கொழும்பு அரசியலில் திடீரென ஏற்பட்ட பரபரப்பு: கடும் மோதலில் ரணில் - பசில் ராஜபக்ஷ! | Colombo Politics Ranil Basil Rajapaksa Tough Fight

அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதிக்கு எதிர்ப்பை வெளியிட்டுவரும் பொதுஜன பெரமுனவினருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார, ரணில் விக்கிரமசிங்க எவரது பின்னாலும் சென்று ஜனாதிபதிப் பதவியைப் பெறவில்லை என்றும், மாறாக அவரை அழைத்தே ஜனாதிபதிப் பதவியை பொதுஜன பெரமுன வழங்கியது என்றும் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் மாறி மாறி கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளதால் அரசாங்கத்துக்குள் முறுகல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலைமை தொடர்ந்தால் எதிர்வரும் பட்ஜட் வாக்குகெடுப்பில் இது தாக்கத்தைச் செலுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: #BasilRajapaksa#Politician#tamilnews#Thamilaaram#ThamilaaramNewssrilanka
Previous Post

எரிபொருள் விலை அதிகரிப்பின் சூழ்ச்சி அம்பலம்

Next Post

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்!

Next Post
இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்!

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.