கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இரு நாள் பயணமாக இன்று யாழ்ப்பாணம் வந்துள்ளார். அவர் பல்வேறு விகாரைகளில் நடைபெற்ற சமய நிகழ்வுகளில் பங்கு கொண்டார்.
பிரதமர் நயினாதீவில் உள்ள விகாரைக்குச் சென்றும் வழிபாடுகளை மேற்கொண்டார். நயினாதீவுக்கு பிரதமருடன் சென்ற கடற்றொழில் அமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில், அவருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டது.
அதையடுத்து கடற்றொழில் அமைச்சரும், அவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post