Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ஒற்றை ஆட்சிக்கு எதிரான கொள்கை வகுக்க மாட்டோம்…! தொடர்ந்து வலியுறுத்தும் நாமல்

August 31, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
ஒற்றை ஆட்சிக்கு எதிரான கொள்கை வகுக்க மாட்டோம்…! தொடர்ந்து வலியுறுத்தும் நாமல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

வடக்கில் உள்ள பிரச்சினைகள் தான் தெற்கிலும் உள்ளன, ஒற்றையாட்சிக்கு எதிரான கொள்கையை வகுக்கமாட்டோம் என பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்துடன் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கி தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவோம் என்றும் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) குறிப்பிட்டுள்ளார்.

பியகம பகுதியில் வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

விவசாயிகளுக்கு முன்னுரிமை

அவர் மேலும் தெரிவித்ததாவது, தேசிய தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்துவோம்.

தேசிய உற்பத்தியாளர்கள், முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கி தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவோம். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவோம். தொழிலின்மை பிரச்சினை தற்போது தீவிரமடைந்துள்ளது.

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளின் 10 இலட்சம் தொழில் வாய்ப்புக்களை அறிமுகப்படுத்துவோம். அதற்கான திட்டங்களை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிப்போம். தேசிய மட்டத்தில் கைத்தொழில் பேட்டைகளை ஸ்தாபிப்போம்.

வடக்கில் உள்ள பிரச்சினைகள்அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் பற்றி பொய்யுரைக்க வேண்டிய தேவை கிடையாது. முடிந்ததை முடியும் என்போம், முடியாததை முடியாது என்போம்.

வடக்கில் உள்ள பிரச்சினைகள் தான் தெற்கிலும் உள்ளன. நாடு என்ற ரீதியில் சிந்தித்து சிறந்த தீர்மானத்தை எடுத்தால் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

அப்போது அரசியல்வாதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காமல் போகும். பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் ஒருமித்த தன்மையில் உள்ளன.

அதிகார பகிர்வு, தேசிய வளங்களை தனியார் மயப்படுத்தல், இறக்குமதி பொருளாதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிரான கொள்கையை நாங்கள் வகுக்க போவதில்லை நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Previous Post

திருகோணமலையில் மாற்றத்தை நோக்கி நகர்வோம் கருத்தரங்கு

Next Post

துர்நாற்றத்துடன் மீட்கப்பட்ட 62 வயதான தாயின் சடலம் ; நடந்தது என்ன?

Next Post
காலியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் பெண் ஒருவர் பலி

துர்நாற்றத்துடன் மீட்கப்பட்ட 62 வயதான தாயின் சடலம் ; நடந்தது என்ன?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.