இலங்கையில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணி முதல் இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள்களுக்கு ஆயிரம் ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிகளுக்கு ஆயிரத்து 500 ரூபாவுக்கும், கார்கள் வான்கள் மற்றும் ஜீப் ஆகியவற்று 5 ஆயிரம் ரூபாவுக்கும் மட்டுமே எரிபொருள் நிரப்ப முடியும் என்று எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பஸ்கள், பாரவூர்திகள், விவசாய வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த சில நாள்களாக இலங்கையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. மக்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post