அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக் கொண்டாலும் மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபை ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது என்று கூறப்படுகின்றது.
ஜனாதிபதி, நிதியமைச்சர் மற்றும் பல தலைவர்கள் கடந்த வாரம் மார்ச் 5 ஆம் திகதிக்குப் பின் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்திருந்த போதும் இலங்கை மின்சார சபை அதற்குப் பதிலளிக்கவில்லை.
சரியான நேரத்தில் எரிபொருளை வழங்கியிருந்தால் மின் தடையை குறைத்திருக்க முடியும் என்று தெரிவித்துள்ள இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர், ஆனால் தற்போது மின்வெட்டை முற்றாக நிறுத்த முடியாது என்று தெரிவிததுள்ளார்.
நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைந்துள்ளதால், மின்சார உற்பத்திக்கு அதிகளவு நீரைப் பயன்படுத்த முடியாதுள்ள என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதனால் தற்போது எரிபொருள் கிடைத்தாலும், உரிய மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்றும், அதனால் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது அவசியமானது என்றும் மின்சார சபையின் தகவல்கள் கூறுகின்றன.
Discussion about this post