எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள எரிபொருள் இருப்பு விவரங்களை அறிக்கையிடுவதற்கு கைபேசிச் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள எரிபொருள் இருப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்தக் கைபேசிச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் செயலியைப் பயன்படுத்தி முற்பகல் 10 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் இருப்புக்களின் தரவுகளைப் பெற்று முற்பகல் 11 மணிக்கும், பிற்பகல் 4 மணிக்கும் பிரதேச செயலர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசனால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காகப் பொருத்தமான தகுதிவாய்ந்த உத்தியோகத்தரை ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பொறுப்பளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post