இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ டுவீற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவொன்றில், இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
பெற்றோல் மற்றும் மருந்துப் பற்றாக்குறையால் இரு குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பாக மருத்துவர் ஒருவர் பதிவிட்டுள்ள பதிவொன்று தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள மஹேல ஜயவர்த்தன,
இதைப் படித்து விட்டு கோட்டாபய ராஜபக்ச குற்ற உணர்வுடன் இருந்தால் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இந்த நிலைமைக்கு அவரே நேரடிப் பொறுப்பு. இந்த நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருமே இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Discussion about this post