இலங்கையில் வன்முறைகள் கட்டுமீறிச் சென்றுள்ள நிலையில் நாடு முழுவதும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
வன்முறைகளை அடுத்து மேல்மாகாணத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் பின்னர் உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, காலிமுகத் திடலில் மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 130 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளபோதும் மக்களைக் கட்டுப்படுத்த முடியாது பாதுகாப்புத் தரப்பினர் திணறுகின்றனர். நாட்டின் பல இடங்களிலும் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.
Discussion about this post