இலங்கையில் தற்போது குறைந்தளவிலான டீசல் கையிருப்பே உள்ளது என்று இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
குறைந்தளவு கையிருப்பே உள்ளதால் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வரையறுக்கப்பட்ட டீசல் விநியோகமே தற்போது மேற்கொள்ளப்படுகின்றது என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, தற்போதுள்ள பெற்ரோல் கையிருப்பு அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கே போதுமானது என்றும் அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தற்போது டீசல், பெற்றோல், மண்ணெண்ணைக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
பெற்றோல், டீசல், மண்ணெண்ணைக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதைக் காண முடிகின்றது.
Discussion about this post