இரட்டை குடியுரிமை உடைய 10 அரசியல்வாதிகள், தற்போதைய நாடாளுமன்றத்தில் எம்.பி. பதவியை வகிக்கின்றனர் என ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரட்டை குடியுரிமை உடையவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதற்கு அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இச்சட்டமூலம் நிறைவேறினால் அந்த 10 பேருக்கும் எம்.பி. பதவியை இழக்க நேரிடும் என தெரியவருகின்றது.
21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ள ‘இரட்டை குடியுரிமை தடை’ என்ற ஏற்பாட்டை நீக்கிக்கொள்வதற்கு இவர்கள் தீவிரமாக செயற்பட்டுவருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
மேற்படி 10 பேரில் மலையக அரசியல் வாதியொருவரும் உள்ளடங்குகின்றார். எனினும், வீசா இன்றி இந்தியாவுக்கு செல்வதற்கான ஓர் ஏற்பாட்டையே அவர் வைத்துள்ளார் எனவும், அது இரட்டை குடியுரிமை அல்லவெனவும் தெரியவருகின்றது.
எனவே ,21 நிறைவேறினால்கூட அவரின் பதவிக்கு சிக்கல் ஏற்படாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Discussion about this post