அலரி மாளிகைக்கு அருகில் உள்ள வீதியில் தொடர் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களின் அனைத்து உடமைகளையும் அங்கிருந்து அகற்றுமாறு பொலிஸாருக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடைபாதைக்கு தடங்கல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் உள்ள ஆர்ப்பாட்டக்காரர்களின் உடமைகளை அகற்ற உத்தரவிடக் கோரி பொலிஸார் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஆயினும் நடைபாதையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வீதியை பயன்படுத்துபவர்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாத வகையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது என கோட்டை நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post