அரச நிறுவனங்களுக்குப் பணியாளர்களை அழைப்பதில் வரையறைகள் விதிக்கப்பட்டு நேற்று சுற்றறிக்கை ஒன்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளரால் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் வளப்பற்றாக்குறை காரணமாக அரச செலவீனங்களைக் குறைக்கும் வகையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கான சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குவதற்கு ஏதுவாக, அத்தியாவசிய ஊழியர்களை மட்டும் இன்று முதல் சேவைக்கு அழைக்க வேண்டும் என்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளரின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்வரை, குறைந்த எண்ணிக்கையான உத்தியோகத்தர்களை மட்டும் சேவைக்கு அழைப்பதற்குப் பொருத்தமான வேலைத் திட்டம் ஒன்றைத் தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்த நடவடிக்கை அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post