புதிய அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பதவி ஏற்பவர்களுக்கு அமைச்சுக்கான சம்பளம் வழங்கப்படாது என்று பிரதமர் ரணில் விக்கிரசிங்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போது அவர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
அமைச்சர்களுக்கு வழமையாக வழங்கப்படும் சில சலுகைக் கொடுப்பனவுகளும் துண்டிக்கப்படும் என்று அவர் தெரிவித்தாா்.
அரசாங்கத்தின் செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளேன் என்று தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, இதற்குப் புதிய அமைச்சர்கள் இணங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
அமைச்சுப் பதவிகளை எதிர்பார்த்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, பிரதமரின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று கூறப்படுகின்றது.
Discussion about this post